நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி – எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்….

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர், சட்டப்பபேரவையில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்  துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி,  மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.

தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.

சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடிநிதி ஒதுக்கீடு.

புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும். செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம்.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் ( TANGEDCO ) 13000 கோடி இழப்பை அரசே ஏற்கிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு. டான்ஜெட்கோவுக்கு மின்கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.

துறைமுக சாலை திட்டம்மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு. இலவச பேருந்து திட்டத்தால் மகளிர் பயணிகளின் பங்கு 40%ல் இருந்து 61% ஆக அதிகரிப்பு. 2,213 பிஎஸ் 6 புதிய பேருந்துகள் போக்குவரத்துத்துறைக்கு கொள்முதல் செய்யப்படும்.

6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.

ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையை போல புத்தக கண்காட்சி. தமிழர்களின் மரபை கொண்டாடக் கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.

வபரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும் .

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

‘மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்

மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4848 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு‘

தமிழ்நாட்டில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, 2657 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.