வட மாநிலங்களில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணங்களை பூசியும், நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஜம்மு – காஷ்மீர் பாராமுல்லா மாவட்டம் போனியார் பகுதியில் ராணுவ வீரர்கள் சிலர் வண்ணங்களை பூசி, நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
இதேபோல், ஸ்ரீநகரிலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் வண்ணப் பொடிகளை தூவி, நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
#WATCH | Locals of Boniyar, Baramulla district dance and celebrate #Holi with Indian Army jawans in remote areas of the district in Jammu and Kashmir.
(Source: Indian Army) pic.twitter.com/R6Poq7HVSH
— ANI (@ANI) March 18, 2022
இதையும் படியுங்கள்.. அதிருப்தி தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு- காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வருமா?