கடந்த 15ஆம் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும், இன்றைய தினம் சோசலிச வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் ராஜபக்சர்கள் போல் வேடமிட்டு பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் போல் வேடமிட்ட பலர் நடு வீதியில் நடமாடுவதை பார்க்கக்கூடியாக இருந்தது.
என்ற போதும் நாட்டில் கடந்த பல நாட்களாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, அவற்றை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசை, அவற்றுக்கும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தாம் கடும் கோபத்தில் இருப்பதாக மக்கள் அவர்களே தெரிவிக்கும் சந்தர்ப்பங்கள் பல இதுவரையில் பதிவாகியுள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் முக்கிய பதவிகளில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே தமது இந்த சூழ்நிலைக்கு காரணம் எனவும் கொதித்தெழுகின்றமை குறிப்பிடத்தக்கது.