பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லை- பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

சென்னை:
தமிழக பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு  உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை  கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.