புதுடில்லி:உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 1990ல், ஜம்மு – காஷ்மீரில் இருந்து, பயங்கரவாதத்தால் காஷ்மீரி பண்டிட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், தி காஷ்மீர் பைல்ஸ் ஹிந்தி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதில், அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்துஉள்ளனர்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.விவேக் அக்னிஹோத்ரி நாட்டில் எங்கு சென்றாலும், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எட்டு வீரர்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்குவர்.
சிறப்பு காட்சி
தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு, பீஹார் அரசு, ஏற்கனவே வரிவிலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், மாநில எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்களுக்கு சிறப்பு காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.’பாட்னாவில் உள்ள திரையரங்கில், 25ம் தேதி மாலை 6:30 மணிக்கு, இந்த சிறப்பு காட்சி நடத்தப்படும்’ என, துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் கூறினார்.
Advertisement