வாஷிங்டன் :
அமெரிக்காவில் பாடகி, பாடலாசிரியை, நடன மங்கை என பல முகங்களைக் கொண்டிருப்பவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 40). பாப் இளவரசி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இவர் கடந்த நவம்பர் மாதம் தனது தந்தையின் பராமரிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சுதந்திரமாக இருந்து வருகிறார்.
இவர் தனது அன்றாட வாழ்க்கை பற்றி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், அவர் அதிரடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி உள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடைசியாக அவர் வெளியிட்ட பதிவில், “என் மீது ஒருபோதும் பரிதாபப்பட வேண்டாம். நான் நேசிக்கப்பட விரும்பவில்லை. நான் பயப்பட விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.