பெங்களூரு-”இந்திரா நகரில் உள்ள பி.டி.ஏ., வர்த்தக கட்டடத்தை இடித்து புதிதாக கட்டுவதற்கான பணியை, ஒப்பந்தம் பெற்றிருந்த பழைய நிறுவனத்திடம் ஒப்படைப்பதா அல்லது புதியவரிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சட்டமேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் வெங்கடேஷ் கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் கூறியதாவது:பெங்களூரின் இந்திரா நகரில் உள்ள பி.டி.ஏ., வர்த்தக கட்டடத்தில், 133 கடைகள் உள்ளன. 68 கடைகள் வாடகைக்கு அளிக்கப்பட்டுள்ளன; 65 கடைகள் காலியாக உள்ளன. 75.91 லட்சம் ரூபாய் வாடகை வருகிறது.இக்கட்டடத்தை இடித்து புதிதாக கட்டும் பொறுப்பு 2019ல், எம்பசி லேண்ட் டெவலபர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 2019 வரை சிறு சிறு பணிகளை மேற்கொண்டது. அதன்பின் பணிகளை நிறுத்தி விட்டது. காலி கட்டடம் இடிக்கப்படவில்லை.எனவே பழைய நிறுவனததிடம் ஒப்படைப்பதா அல்லது புதியவரிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆலோசித்து, முடிவு செய்யப்படும். இங்கு அதிநவீன வர்த்தக கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement