மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழக அரசு பள்ளிகளில் 18 சதவீதம் மட்டுமே இணைய இணைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை விடவும் பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீத பள்ளிகளில் செயல்படும் கணினிகள் இருந்த போதிலும் அரசுப் பள்ளிகளில் மோசமான இணைய இணைப்பு இருக்கும் காரணத்தால் கணினிகளை முழுமையாக இயங்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் மாநிலங்கள் மத்தியில் பெரிய வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது எனக் கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரியில் 94.79 சதவீத இணைப்பு வசதியும், கேரளாவில் அரசுப் பள்ளிகளில் 87.21 சதவீதமும் உள்ளது என ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ+) அறிக்கை 2021-22 தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே கல்வியறிவு விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொற்றுநோய் காலங்களில் கூட அரசுப் பள்ளிகள் ஆன்லைன் கல்விக்கு முறைக்குத் தகுதிபெறவில்லை என்றால், அரசின் திட்டமிடலில் குறைபாடு இருப்பதைக் காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே பதிலளிக்க வேண்டும் என்றும்
கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆர்.தாமோதரன் கூறுகிறார்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கல்வித்துறையை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. இதேபோல் அரசு பள்ளியில் இணைய இணைப்பு மேம்படுத்தப்பட்டு, பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் இருக்குமான என்ற எதிர்பார்ப்பு எழுத்துள்ளது.
Tamil Nadu Govt Schools Internet Connectivity Lags Behind Kerala, Puducherry
Tamil Nadu Govt Schools Internet Connectivity Lags Behind Kerala, Puducherry புதுச்சேரி, கேரளா-விடப் பின்தங்கிய தமிழ்நாடு.. பட்ஜெட்டில் சரி செய்யப்படுமா..?!