போட்டோகிராபராக நடிக்கும் நஸ்ரியா ; வெளியானது பர்ஸ்ட் லுக்
தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. மலையாளத்தில் பெங்களூர் டேஸ் படத்தில் நடித்தபோது நடிகர் பஹத் பாசிலுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து, அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள நஸ்ரியா, மலையாளத்தில் தனது கணவருடன் இணைந்து ட்ரான்ஸ் என்கிற படத்தில் நடித்தார்
அதைத் தொடர்ந்து தெலுங்கிலும் அவருக்கு நானி படத்தில் ஜோடியாக நடிக்க கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்த வகையில் அண்டே சுந்தரானிக்கி என்கிற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. இந்த படத்தில் அவர் லீலா தாமஸ் என்கிற போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று நஸ்ரியாவின் கதாபாத்திர பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.