உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அமைதியான முறையில் எதிர்க்கும் விதமாக லிவிவ் நகரின் மைய சதுக்கத்தில் சுமார் 109 குழந்தைகள் தொட்டில் வண்டிகளை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய போரின் 23வது நாளான இன்று அதிகாலை மேற்கு உக்ரைனின் முக்கிய நகரான லிவிவ்விற்கு அருகில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை பழுது நிக்கும் மையத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ள லிவிவ் நகரின் இந்த பகுதியானது நேட்டோ கூட்டமைப்பு நாடான போலந்தில் இருந்து வெறும் 40கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்து இருக்கும் நிலையில், இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஒருவராவது உயிரிழந்து இருக்ககூடும் என அப்பகுதி மேயர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலை எதிர்க்கும் விதமாகவும், இந்த போரினால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உலகிற்கு விளக்கும் வகையிலும், இதுவரை இந்த போரில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை பிரதிபலிக்கும் விதமாக 109 குழந்தைகளின் தொட்டில் வண்டிகளை லிவிவ் நகரின் ரினோக் சதுக்கத்தில் நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படத்தை உக்ரைனின் உள்விவகாரத்துறையின் ஆலோசகர்
அன்டன் ஜெராஷ்செங்கோ அவரது டெலிக்ராம் பக்கத்தில் எங்கள் உக்ரைனிய குழந்தைகளின் வாழ்கை என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும், நாங்கள் உலகை பாதுகாத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்கள் குழந்தைகளையும் இழந்து நிற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடு சபையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இதுவரை 780 பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் அதில் 58 உயிர்கள் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது இந்த அறிக்கைவிடவும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வான்படை தளபதியை இழந்துள்ள ரஷ்யா: உக்ரைன் ராணுவம் அதிரடி