மருத்துவ உபகரண ஊழல் பற்றி பேசும் பேட்டரி

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் உள்பட பலர் நடித்திருகிறார்கள். வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிபாரதி இயக்கியிருக்கிறார், சித்தார்த் விபின் இசை அமைத்திருக்கிறார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி மணிபாரதி கூறியதாவது: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செலவு என்பது ஒரு எளிதில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

அப்படிப்பட்ட மருத்துவ துறைக்கு வாங்கப்படும் உபகரணங்களில் முறைகேடு நடக்கும் போது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அதனால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்றதை நெஞ்சம் பதைபதைக்க சொல்லும் ஒரு க்ரைம் திரில்லர் படம்.

இந்த படத்திற்காக சித்தார்த் விபின் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடி கொடுத்திருக்கிறார். அவருடன் சக்திஸ்ரீ கோபாலன் இணைந்து பாடி உள்ளார்.போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.

அப்போது அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார். “நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே என்னில் ஏதோ ஆனது நீதானே..” என்று தொடங்கும் பாடலை நெல்லை ஜெயந்தா எழுதி உள்ளார். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.