விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
இந்நிலையில் மைனா’ தனது கணவர் யோகி உடன் துபாய் நாட்டுக்கு டூர் சென்ற வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், துபாய் ஏர்போர்டில் இறங்கியதும், ஹோட்டலுக்கு சென்ற மைனாவும், யோகியும், அங்குள்ள ரூமை சுற்றி காட்டுகின்றனர். சொல்ல போனால் அது ஒரு வீடு என்றுதான் சொல்ல வேண்டும். லிவிங் ரூம், பெட்ரூம், சோஃபா, டிவி, டுயல் பாத்ரூம் என அவ்வளவு பெரிதாக இருக்கிறது!
பிறகு துபாயில் உள்ள சிட்டி செண்டர் மாலுக்கு சென்ற மைனாவை யோகி, வீடியோ எடுக்க ஆரம்பிக்க’ சர்ப்ரைஸாக மாகாபா மனைவி சூசன் என்ட்ரி ஆகிறார். ஓ! அப்போ எல்லாரும் ஒன்னாதான் துபாய் போயிருக்காங்க போலே.
பிறகு, யோகி மைனாவிடம்’ உன் டிரெஸ காமி என சொல்ல, உடனே மைனா’ கேமிராவுக்கு முன்னாடி வந்து, அத்தனை பேர் கூடியிருக்கும் மாலில்’ காலுக்கு வந்தபடி ஸ்டெப் போடுகிறார்.
தொடர்ந்து யோகி நடந்தபடியே செல்ஃபி வீடியோ எடுக்க, யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. அடுத்த என்ட்ரி மாகாபா. ஓ! அப்போ ஃபேமிலியா தான் இவங்க துபாய் டூர் போயிருக்காங்களா?
பிறகு யோகியும், மைனாவும்’ அங்குள்ள எலக்ட்ராணிக் ஷாப்-க்கு சென்று, யூடியூப் சேனலுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.
ஒருவழியாக மாலில் இருந்து வெளியே வந்த மைனாவும், யோகியும், அடுத்து ஒரு கப்பலில் டின்னர் சாப்பிட போறாங்க!
முதல் தடவையா நான் கப்பல்ல போறேன். அந்த கப்பல் எப்படியிருக்கு. அங்க என்னென்னலாம் இருக்கு அப்படின்றத தான் நாம பாக்க போறோம் மைனா சொல்ல’ என்ன நேரமோ தெரியவில்லை, அவர்கள் சென்ற கார் டிராஃபிக்கில் சிக்க, இருவரும் கால்நடையாகவே நடந்து ஒருவழியாக அந்த கப்பலுக்கு வந்துவிட்டனர்.
கப்பல், வெளியே நின்று, நம்ம கப்பலுக்கு மேலே போன உடனே நீ ஜேக்கா மாறிடற, நான் ரோஸா மாறிடறேன் என மைனா சொல்ல, இருவரும் கப்பலுக்குள்’ அவர்கள் ரிசர்வ் பண்ணிய டேபிளில்’ அமர்ந்து’ ஜாலியாக பேசி சிரித்து என்ஜாய் செய்கின்றனர். பிறகு, அங்கிருக்கும் உணவுகளில் பிடித்ததை, தேர்வு செய்து சாப்பிடுகின்றனர்.
அங்கிருந்தபடியே, இரவில் மிளிரும் வானுயர்ந்த துபாயின் கட்டிங்களை வீடியோவில் காட்டி, வேறொரு வீடியோ பாக்கலாம்னு முடிக்கின்றனர். இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“