முதல்வரின் முகவரி -அகரமுதலி-ஐஐடி-என்ஐடியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி….

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் முகவரி திட்டம், அகரமுதலி திட்டம், ஐஐடி-என்ஐடி போன்ற தேசிய கல்வி நிலையங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

“முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது

தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு. தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.

அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்

தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 82.86 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்

“அகரமுதலி” திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்

தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

அரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்

தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க நடவடிக்கை

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரசித்தி பெற்ற பல்கலையில் சேர ஊக்குவிப்பு செய்யப்படும்.  புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடி/என்ஐடி/எய்ம்ஸ்/ஐஐஎஸ்சி  கல்வி நிறுவனத்தில் சேரும் அனைத்து அரசு மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் (6-12வது) கல்வி கட்டணங்கள்  மற்றும் செலவினங்கள் போன்றவை தமிழ்நாடு அரசால் கவனிக்கப்படும்.

 

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.