மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படுமென கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் அடுத்த வாரம் டெல்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படும் என்றார்.
முன்னதாக பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டார்.