லக்கி நம்பர் இல்லை… நம்பர் 7 ஜெர்ஸி குறித்து சுவையான விளக்கம் கொடுத்த தோனி!

MS Dhoni Tamil News: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் உள்ள லாலா பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

வழக்கம் போல தொடருக்கு முன்னதாகவே பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மேலும், அணியில் புதிதாக இணைந்துள்ள இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும் வருகிறார்.

இதற்கிடையில், சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு கேப்டன் தோனி சமீபத்தில் பதிலளித்து இருந்தார். அப்போது அவர், தான் ஏன் 7 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுகிறேன் என்பதற்கான சுவையான விளக்கத்தை அளித்து இருந்தார்.

இது குறித்து தோனி, ” 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக தான் அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். எனவே, 7வது மாதம் 7வது நாள், அதுதான் காரணம்.

எந்த எண் நல்ல எண் என்று பார்ப்பதற்குப் பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த நினைத்தேன். அதே நேரத்தில் பலர் எண் 7-யை அதிஷ்ட எண்ணாக கருதுவதில்லை. நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் எண் 7 என் இதயத்திற்கு நெருக்கமான எண்.” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.