போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள லிவிவ் நகரத்தின் விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் ரஷியா இன்று ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
18-03-2022
19.20: உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
19.15: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போரை நிறுத்தும்படி ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீன அதிபரிடம் பைடன் வலியுறுத்த வாய்ப்பு.
19.05: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், போலந்துக்கு மாற்றப்பட்ட பிறகும் உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.50: பல்கேரியாவைத் தொடர்ந்து எஸ்டோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் 10 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளன.
போர் நடைபெற்று வரும் உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்படி இலங்கை அரசுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் முக்கிய மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் வலியுறுத்துகின்றன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் 23ம் தேதி மாலை 6 மணியளவில் ஜப்பான் பாராளுமன்றத்தில் காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
17.45: ரஷியா மற்றும் பெலாரஸ் உடனான வழக்கமான வர்த்தக உறவுகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
17.30: ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற பல்கேரியா. கெடு விதித்துள்ளது.
17.15: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
17.00: மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கட்டிட இடுபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
16.00: லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான பராமரிப்பு ஆலை மீது இன்று காலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லிவிவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
15:50: தென்கிழக்கு நகரமான மரியுபோல், ரஷிய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
15.45: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னாம், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் என மொத்தம் 43 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளா்ர.
15.40: உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
15.30: மரியுபோல் நகரில், மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நிலையில் அங்கு உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.