#லைவ் அப்டேட்ஸ் : உக்ரைன் மீதான ரஷியா போர் 23-வது நாள்; லிவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல்

மார்ச் 18, 19:00 PM
கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட  222 -பேர் உயிரிழப்பு
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது கடந்த மாதம் 20 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 23- வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற போராடி வருகிறது. 
உக்ரைன் படைகள் வலுவாக எதிர்ப்பதால்,  இரு தரப்பினருக்கும் கடுமையாக மோதி வருகின்றனர். போர் தொடங்கியதில் இருந்து கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட 222- பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 241 பொதுமக்கள் உள்பட 889- பேர் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்து இருப்பதாகவும் கீவ் நகர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மார்ச் 18, 17:47 PM
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில்  இருந்து சுமார் 14,200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன.மேலும்  93 ரஷிய விமானங்கள் மற்றும் 112 ஹெலிகாப்டர்களுடன் 450 ரஷிய டாங்கிகள் மற்றும் கிட்டத்தட்ட 1,450 மற்ற கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 72 ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் 43 விமான எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுடன் 205 ரஷிய பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை உறுதி செய்யமுடியவில்லை.
அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷியாவின் உயிரிழப்புகள் 3,000 முதல் 10,000 வரை இருக்கும் என்று அமெரிக்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 18, 17:16 PM

ரஷிய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவில்  இன்று காலை அடுக்குமாடி கட்டிடம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் , ஒருவர் பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர். அதேபோல், கிராம்டோர்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர் என்று அந்த மாகாணத்தின் கவர்னர் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தார். 

மார்ச் 18, 16:10 PM
உக்ரைன் லிவிவ் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலியானார்.  நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
மார்ச் 18, 16:00 PM
பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12 பேர் மீட்கப்பட்டனர்
லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு ஆலை இன்று காலையில் தாக்கப்பட்டது. உயிர்சேதம் எவும் ஏற்படவில்லை. லுவீவ் போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அதிகாரிகள், ரஷிய படைகள் சமீபமாக எங்கும் முன்னேறவில்லை, படைவீரர்களின் மன உறுதி மற்றும் தளவாட பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மார்ச் 18, 15:50 PM
தென்கிழக்கு நகரமான மேரியோபோல், ரஷ்ய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சுமார் 30,000 பேர் தப்பியோட முடிந்தது.
மேற்கு நாடுகளின் தடைகளில் இருந்து ரஷியாவை காப்பாற்றினால், சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 18, 01:13 PM
மார்ச் 18, 11:19 AM

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் உதவியை மரினா ஓவ்சியனிகோவா நிராகரித்துவிட்டார்.





மார்ச் 18, 09:30 AM

ரஷியாவால் குண்டு வீசித் தாக்கப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறும் மேரியோபோலில் உள்ள ஒரு திரையரங்கில் உயிர் பிழைத்தவர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 18, 08:30 AM
மார்ச் 18, 06:53 AM
மார்ச் 18,  2022 06:26 AM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.