டாக்கா,
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் லால் மோகன் சஹா தெருவில், ராதாகந்தா என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென கோவிலுக்குள் புகுந்த 200 பேர் கொண்ட கும்பல் கோவில் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் கோவில் சேதமடைந்தது. கோவிலில் இருந்த பலர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர். இதன்பின்பு கோவிலில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது. இந்த கும்பலை ஹாஜி சபியுல்லா என்பவர் வழிநடத்தி உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு கோவிலின் துணை தலைவர் ராதாரமண தாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின்போது நடந்த துரதிர்ஷ்ட சம்பவம் என குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த காலங்களிலும் டாக்காவில் உள்ள திப்பு சுல்தான் சாலை மற்றும் சிட்டகாங்கில் உள்ள கொத்வாலி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து உள்ளன.