சென்னை: வரும் 2022-23ம் நிதியாண்டில் வணிகவரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,06,765.22 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாநில எக்சைஸ் வரிகள் வாயிலாக, வரும் நிதியாண்டில் ரூ.10,589.12 கோடி வருமானம் கிடைக்கும். முத்திரைத்தாள், கட்டணம் வாயிலாக வரும் ஆண்டில் அரசுக்கு ரூ.16,322.73 கோடி வருமானம் வரும். மோட்டார் வாகன பதிவு கட்டணம் வாயிலாக வரும் நிதியாண்டில் ரூ.7,149.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
