தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார்.
பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.