ஜெய்ப்பூரில் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்ணை ஆயுர்வேத மசாஜ் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து 45 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்கு ஆயுர்வேத மசாஜ் வழங்கப்பட்டது. அவருக்கு மசாஜ் செய்ய பெண் மசாஜ் கலைஞர் வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் மசாஜ் கலைஞர் அவரது அறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அந்த தொழிலாளி மசாஜ் என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மசாஜ் தொழிலாளி சம்பவம் குறித்து வாயை திறக்க வேண்டாம் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி ஹோட்டலை விட்டு வெளியேறிய பிறகு, பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இது குறித்து அவர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 இன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு செய்த நான்கு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர் காவல்துறையினர். கைது செய்யப்பட்ட இளைஞர் கேரளாவைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் மசாஜ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் ராஜஸ்தானில் இருந்து கேரளாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தபோது காவல்துறையினர் அவரை பிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM