நடிகர்
அஜித்
தற்போது AK61 படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான
வலிமை
படம் வசூலில் சக்கைபோடு போட்டாலும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.
இதையடுத்து வினோத் மற்றும் அஜித் இணையும் AK61 படத்தை ஒரு மெகாஹிட் படமாக கொடுத்து விட்டதை பிடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் தற்போது அஜித்தின் 62 ஆவது படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடு வெடிய… பட்டாசாய் வெளியான ‘ஏகே 62’ பட அறிவிப்பு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
AK62
படத்தை
விக்னேஷ் சிவன்
இயக்க
லைக்கா
நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத்
இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது. தற்போது பலரும் பேசப்பட்டு வருவது அஜித் ஏன் விக்னேஷ் சிவனை தன் அடுத்த படத்தின் இயக்குனராக தேர்ந்தெடுத்தார் என்பதுதான்.
அஜித் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சீரியசான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே அஜித் சற்று மாறுதலுக்காக ஜாலியான காமெடி கலந்த காதல் கதையில் நடிக்க எண்ணினாராம்.அந்த வகையான படங்களை இயக்குவதில் வல்லவரான விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடித்துப்போகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அஜித்.
இந்நிலையில் அஜித்தை நாம் பல ஆண்டுகள் கழித்து ஜாலியான ஒரு படத்தில் பார்க்கப்போகின்றோம் என அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!