விஜய் நடிகராவதில் எனக்கு இஷ்டமில்லை..அதனால் தான் அப்படி செய்தேன் : எஸ்.ஏ.சந்திரசேகர்

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்
விஜய்
என்று சொல்லிய காலம் மாறி தற்போது தளபதி விஜய்யின் அப்பா
SAC
என்று சொல்லும் அளவிற்கு விஜய் வளர்ந்துள்ளார். நடிகராக பூவே உனக்காக படத்தில் உதித்து, காதல் நாயகனாக காதலுக்கு மரியாதையில் வளர்ந்து, திருமலையில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கின்றார் விஜய்.

இந்த அளவிற்கு விஜய் வளர்ந்து இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் சந்தித்த அவமானங்கள் தான் என விஜய்யே பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கின்றார். நடிக்கவேண்டும் என்ற ஆசையை தன் அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறியிருக்கின்றார் விஜய்.

விக்ரம் படம் இப்படித்தான் இருக்கும்..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!

ஆனால் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனரான சந்திரசேகருக்கு சினிமா பயணம் அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். அதன் காரணமாக விஜய்யை நடிக்கவேண்டாம் என்றார்
எஸ்.ஏ.சந்திரசேகர்
. ஆனால் விஜய் விடாப்பிடியாக இருந்ததால் அரைமனதாக சம்மதித்தார் SAC .

விஜய்

இருப்பினும் முதல் நாள் படப்பிடிப்பில் கஷ்டமான காட்சியை கொடுத்தால் விஜய் பயந்து நடிப்பு வேண்டாம் என சொல்லிவிடுவார் என கருதினார் எஸ்.ஏ.சந்திரசேகர். எனவே விஜய்யின் முதல் படமான
நாளைய தீர்ப்பு
படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் விஜய்க்கு பக்கபக்கமாக வசனங்களை கொடுத்து நடிக்க சொன்னார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் நடிக்க வந்த முதல் நாள் முதல் காட்சியே இவ்வளவு கஷ்டமாக கொடுக்கின்றாரே என பேசினார்கள். ஆனால் இதெற்கெல்லாம் அசராத விஜய் அந்த காட்சியை ஒரே டேக்கில் ஒகே செய்துவிட்டாராம்.

விஜய்

இதனை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் அசந்துபோனார்களாம். அன்றுதான் விஜய் எப்படியும் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருவார் என்று முடிவெடுத்த SAC அவரின் வளர்ச்சிப்பதைக்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.