இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தமிழக அரசு விவசாயத் துறைக்குத் தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் வகையில் 2022-23 ஆம் நடப்பாண்டில் கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும், நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளச் சுமார் 2,787 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளையில் விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகவும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !
பயிர்க்கடன்,நகைக்கடன்
பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என இம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தாக 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
14,15,916 விவசாயிகள்
இதேபோல் நடப்பு நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்குச் சுமார் 9,773 கோடி ரூபாய் மதிப்பிலான
புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் பட்ஜெட் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த 14,15,916 விவசாயிகளில் 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் அளவிலான கடன் வழங்கப்பட்டு உள்ளது.
வட்டியில்லா பயிர்க்கடன்
இந்தியாவிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்தப் பட்ஜெட் திட்டத்தில்
200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பொது விநியோகத் திட்டம்
மேலும் பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகப் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார். பொது விநியோகத் திட்டத்தில் முக்கியமான சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஏற்கனவே பிடிஆர் குறிப்பிட்டு இருந்தார்.
13,176.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இதன் தமிழக அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்குக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் சுமார் 13,176.34 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நிலக்குத்தகைக் கொள்கை
சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்கள் அதிகப்படியான அளவில் பயன்படுத்துவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.
crop loan waiver, jewel loan waiver update on Tamilnadu Budget 2022
crop loan waiver, jewel loan waiver update on Tamilnadu Budget 2022 14,15,916 விவசாயிகளுக்குப் பயிர்கடன்.. அரசு நிலங்களுக்குப் புதிய குத்தகை கொள்கை மூலம் கூடுதல் வருமானம்..!