கொரோனா தொற்று பரவியது முதல் புத்த மத தலைவர் தலாய் லாமா பொது இடத்தில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு போதனை வழங்கினார்.
தர்மசாலாவில் உள்ள முக்கிய திபெத்திய கோவிலான சுக்லகாங்கில் போதிசிட்டா (செம்கியே) உருவாக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட தலாய் லாமா உரையாற்றும்போது, ஜாதகக் கதைகளிலிருந்து ஒரு சிறிய போதனையையும் வழங்கினார்.
இதற்கிடையே, தலாய் லாமா வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் டாக்டருடன் கூட குத்துச்சண்டை போட முடியும் என்ற உடல்நிலையில் இருப்பதால் அங்கு செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
இது மிகவும் அழகான நாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புனிதரை காண்கிறோம். மிகவும் அதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால் அவர் நலமுடன் இருக்கிறார். அவருடைய நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது புனிதத்தை காண நாங்கள் உண்மையிலேயே மிகழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தேர்தல் தோல்விக்கு சோனியா மட்டுமே காரணம் இல்லை- ப.சிதம்பரம் பேட்டி