இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று வரும் 2022 -23 ம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தற்போது நடப்பாண்டுக்கான முழுமையான பஜெட்டாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.
காகிதமில்லா பட்ஜெட் என்பதால் எம்எல்ஏகளுக்கு பஜ்ஜெட் நகல் வழங்கப்படாது. அதே சமயம் சட்டமன்றத்தின் பெரிய திரைகளில் பட்ஜெட் தாக்கல் ஒளிபரப்படும். மேலும், பொதுமக்களும் வகைகளை அறிந்து கொள்ளும் வகையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய அறிவிப்புகளும் மக்கள் நலத்திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது