உக்ரைன் மீதான 23-வது நாள் ரஷ்ய படையெடுப்பில், தலைநகர் கீவில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை நடந்த நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
லிவிவ் விமான ஆலை அழிக்கப்பட்டது:
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ரஷ்யா பல ஏவுகணைகளை செலுத்தியதில் அதற்கு அருகிலுள்ள விமானம் பழுதுபார்க்கும் ஆலை அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிவிவ் நகரம், போலாந்து எல்லைக்கு அருகில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டு வருகிறது.
மற்ற உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ஷெல் தாக்குதல்:
உக்ரைனின் பல முக்கிய நகரங்களும் இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. கிழக்கு நகரமான கார்கிவில் ஒரு பல்கலைக்கழக கட்டிடம் மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஷெல் குண்டு வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார், 11 பேர் காயமடைந்தனர்.
PC:AP
மேலும், தெற்கே கிராமடோர்ஸ்க் மீது நடந்த ஏவுகணை தாக்குதலின்போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர். தலைநகர் கீவில், குடியிருப்புப் பகுதியில் விழுந்த ஏவுகணை வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சுற்றி வளைக்கப்பட்ட மரியுபோல் நகரம்:
கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகள், ஆயுதப் படைகளின் உதவியுடன், தெற்கு உக்ரைனில் துறைமுக நகரமானமரியுபோலைச் சுற்றி வளைக்கிறார்கள் என்று ரஷ்யா கூறுகிறது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ
திரையரங்கு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் மீட்பு:
உக்ரைனின் மனித உரிமைத் தலைவர் மரியுபோல் நகரத்தில் குண்டுவீசித் தாக்கப்பட்ட திரையரங்கில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுவதாகக் கூறுகிறார். ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டிய இந்தத் தாக்குதலில் இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
PC:AP
போலாந்து நாட்டுக்குள் நுழைந்த 2 மில்லயன் உக்ரைனியர்கள்:
உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக போலாந்து எல்லைக் காவலர் கூறுகிறார். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.