#AK62 : அஜித்துடன் கைகோர்க்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், அஜித்தின் #AK62 குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.