அமேசானில் மாயமான சிறுவர்கள் மீட்பு| Dinamalar

அமேசான்:உலகின் மிகப்பெரிய அமேசான் காடுகளுக்குள், கடந்த மாதம் மாயமான சிறுவர்கள் உடல் சோர்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அமேசான் மாகாணத்தில், உலகின் மிகப்பெரிய அமேசான் காடுகள் உள்ளன. இதன் அருகே இருக்கும் மனிகோரோ கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கிளாக்கோ, 7, மற்றும் க்ளீசன் பெரீரா, 9, இருவரும் பிப்., 18ல் சிறு பறவைகளை பிடித்து வருவதற்காக காட்டுக்குள் சென்றனர். பின் அவர்கள் வீடு திரும்பவில்லை. வனப்பகுதியில் மாயமான அவர்களை தேடும் பணி துவங்கியது. மீட்பு குழுவினர் மற்றும் கிராம மக்களின் தேடுதல் நடவடிக்கை, பலத்த மழையால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்ற ஒருவர் சிறுவர்களை பார்த்தார். பல நாட்கள் உணவு இல்லாமல், இருவரும் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். சிறுவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி செய்த பின், விமானம் வாயிலாக வேறு நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.