இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த சவுதி ஆராம்கோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான டீல் தோல்வி அடைந்தது. இதனால் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சவுதி ஆராம்கோ உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் சவுதி அரேபியா உடன் முக்கியமான கூட்டணியை உருவாக்கவும், சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் , சவுதி ஆராம்கோ மற்றும் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் உடன் கூட்டணி உருவாக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சவுதி நாட்டின் ஆராம்கோ பங்குகளை வாங்கும் முக்கியமான திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
ஆராம்கோ பங்குகள்
ஆராம்கோ பங்குகளை வாங்கும் அளவிற்குப் பல பில்லியன் டாலர் அளவிலான பணத்தை அதானி முதலீடு செய்ய முடியாது என்றாலும், பங்கு பரிமாற்றங்கள் கட்டாயம் செய்ய முடியும். மேலும் இந்தப் பங்கு பரிமாற்றம் அதானி குழுமம் மற்றும் ஆராம்கோ உடன் SABIC போன்ற கூட்டணி நிறுவனத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பயிர் ஊட்டச்சத்துக்கள் அல்லது இரசாயனங்கள் ஆகிய துறையில் உருவாக்கப்படலாம்.
இந்தியாவில் முதலீடு
இதேவேளையில் சவுதி நாட்டின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனமான PIF, இக்கூட்டணி மூலம் அதானி குழுமத்தின் வாயிலாக இந்தியாவின் பல உள்கட்டுமான திட்டத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அனைத்தும் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும்
சவுதி ஆராம்கோ
அதானி குழுமம் உடனான கூட்டணி மூலம் சவுதி ஆராம்கோ உலகிலேயே அதிக எனர்ஜியை உட்கொள்ளும் நாடான இந்தியா உடன் முக்கிய மற்றும் நீண்ட காலக் கூட்டணியை உருவாக்க முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனான 15 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் தோல்வி அடைந்த நிலையில் இது இரு தரப்புக்கும் முக்கியமானதாக உள்ளது.
Gautam Adani entering into partnerships with Saudi Aramco, Public Investment Fund
Gautam Adani entering into partnerships with Saudi Aramco, Public Investment Fund அம்பானியால் முடியாததை அதானி செய்கிறார்.. சவுதி ஆராம்கோ உடன் டீல்..!