பெங்களூரு : ”கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,” என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது.
வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., – டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., – -எஸ்.டி., பிரிவினருக்கு 47; பிற்படுத்தப்பட்டோருக்கு 45; பொதுப்பிரிவினருக்கு 42 எனவும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,” என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.