How to change aadhaar card photo in Tamil: ஆதார் கார்டில் உங்கள் புகைப்படம் பிடிக்கவில்லையா? இப்போது அதனை எளிமையாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட இந்த அடையாள ஆவணத்தில் கார்டு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன. இது 12 இலக்க அடையாள எண்ணைக் கொண்டுள்ளது. இன்றைய நாளில் வங்கிக் கணக்குகளைத் திறப்பது போன்ற பல முக்கியமான பணிகளுக்கு ஆதார் கார்டு பயன்படுகிறது.
உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் UIDAIஐ அணுக வேண்டும். UIDAI இன் உதவியுடன் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் புதுப்பிக்கலாம்.
நம்மில் பலருக்கு ஆதார் அட்டையில் இருக்கும் நமது புகைப்படம் பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால் அன்றைய கூட்டத்தில், கசங்கி வியர்வை வழிய புகைப்படம் எடுத்திருப்போம். அதுவும் அப்போதைய வெப்கேமில் புகைப்படத் தெளிவும் அந்த அளவிற்கு இருக்காது. மேலும் சிலர் ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். ஆகவே உங்களது அப்போதைய தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உங்களின் சிறந்த புகைப்படத்தைப் புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் இப்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
இதையும் படியுங்கள்: EPFO News: ரூ.7 லட்சம் வரை கூடுதல் நன்மை; எப்படி தெரியுமா?
ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.
தேவையான அனைத்து விவரங்களையும் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
பின்னர் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.
உங்கள் புதிய படத்தை இங்கே எடுத்து, உங்கள் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.
இதற்குப் பிறகு, நீங்கள் ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) பெறுவீர்கள்.
இந்த URN மூலம் உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பை நீங்கள் கண்காணிக்கலாம்.
இந்த புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றும்போது அதற்கான புகைப்படம் எடுக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டையில் சிறந்த புகைப்படத்தைப் பெற விரும்பினால், நீங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.