ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆந்திர அரசு சலுகை

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரகனி நடித்துள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த இரண்டு வீரர்களை பற்றிய கதை. வருகிற 25ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளிவருகிறது.

ஆந்திர மாநில அரசு அண்மையில் சினிமா டிக்கட் கட்டணத்தை வரையரை செய்து வெளிட்டது. அதன்படி தனி தியேட்டர்களில் அதிகபட்சம் 120 ரூபாய் கட்டணமும், மல்டி பிளக்சில் 150 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்தது அதோடு 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் படங்கள் படம் வெளியான ஒரு வாரத்திற்கு தியேட்டர் உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம் என்று சலுகை அறிவித்தது. அந்த படங்களின் 30 சதவிகித படப்பிடிப்பு ஆந்திராவில் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நடைமுறை இனி தயாராகும் படங்களுக்கே பொருந்தும் என்றும் கூறியது.

ஆனால் ஆர்ஆர்ஆர் படம் முன்பே தயாராகி விட்டது. இதனால் அதன் தயாரிப்பாளர்கள் முதல்வரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ஆர்ஆர்ஆர் படம் இயக்குனர், நடிகர்களின் சம்பளம் தவிர்த்து 336 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 80 சதவிவித படப்பிடிப்புகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படமாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மண்ணின் கவுரவமிக்க இரண்டு வீரர்களை பற்றிய படம் எனவே இந்த படத்திற்கு தனி சலுகை தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

தற்போது இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு ஆர்ஆர்ஆர் படத்திற்கு முதல் 10 நாட்களுக்கு தியேட்டர் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.