புதுடில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இந்திய வம்சாவளி மக்களுக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வசந்தகாலத்தை வரவேற்கும் விழாவான ஹோலி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் வெகு விமரிசையாக கொண்டாடினர்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இந்திய வம்சாவளியினருக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த பண்டைய திருவிழா மக்களை ஒன்றுசேர்க்கிறது. நட்பு மற்றும் ஒற்றுமையை வலுபடுத்துகிறது.இந்த நாளில், தங்கள் குடும்பத்தினர் மீது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய மக்கள் மீதும் அன்புடனும் அக்கறையுடனும் இருந்து வரும் இந்திய வம்சாவளியினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை மறுநாள், நம் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இருதரப்பு பேச்சு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement