இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!

இண்டியன்வெல்ஸ்,
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 6 வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப்புடன் மோதினார். 

1 மணிநேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் சிமோனாவை வீழ்த்தி முதல் முறையாக இண்டியன் வெல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா மற்றும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி மோதினர். இந்த ஆட்டத்தில் மரியா சக்கரி 6-2, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் படோசாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மரியா சக்கரி மற்றும் இகா ஸ்வியாடெக் மோத உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.