இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் – மோடி

Japan to invest USD 42 billion in India over next five years, says PM Modi: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்ததைத் தொடர்ந்து, ஜப்பான் இந்தியாவில் ஐந்து டிரில்லியன் யென் (42 பில்லியன் டாலர்) முதலீட்டு இலக்கை நிர்ணயித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சனிக்கிழமையன்று புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியை ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்தித்தார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவும் ஜப்பானும் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும், ஜப்பான் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிலையான வளர்ச்சி முயற்சியையும் அறிவித்தது.

முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஒரு ட்வீட்டில், மோடியும் கிஷிடாவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகக் கூறியது, இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

வெளியுறத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பிரதமர் @narendramodi மற்றும் ஜப்பானிய பிரதமர் @kishida230 சந்திப்புடன் 14 வது ஆண்டு உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான மற்றொரு படி – அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான கூட்டு!” என பதிவிட்டுள்ளார்.

கிஷிடா அரசாங்கத் தலைவராக தனது முதல் பயணமாக சனிக்கிழமையன்று இந்தியா வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லியில் இருந்து ஜப்பான் திரும்புகிறார்.

இதையும் படியுங்கள்: பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்; உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு எச்சரிக்கை

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பிரத்யேகப் பகுதியில், கிஷிடா, “இன்று, நான் இந்தியாவுக்கு வந்துள்ளேன், நான் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு எனது முதல் இருதரப்புப் பயணத்தை மேற்கொள்கிறேன். ஜப்பானும் இந்தியாவும் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற உலகளாவிய மதிப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது, இது பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, மேலும், ஜப்பானும் இந்தியாவும் வியூக நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் “சிறப்பு வியூக மற்றும் உலகளாவிய கூட்டாளிகள்”. இந்த மைல்கல் ஆண்டில், ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், நான்கரை ஆண்டுகளில் ஜப்பானின் பிரதமராகப் பணியாற்றிய ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதல் பயணமாக, இந்தியாவின் அளப்பரிய ஆற்றலை நானே உணரக்கூடிய இந்தப் பயணத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்று எழுதினார்.

(PTI உள்ளீடுகளுடன்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.