சென்னை: சிறுதானிய சாகுபடி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்த, கட்டமைப்புகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.