இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. வேளாண் பட்ஜெட்டில் அசத்தலான அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான முழுப் பொதுப் பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாதராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கையைத் தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

வேளாண் துறைக்கான கடந்த ஆண்டு முதல் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று முழுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திரத்திற்கு அடுத்த 3ஆவது மாநிலமாகத் தமிழகத்தில் வேளாண் துறைக்கு எனத் தனிப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இளைஞர்களுக்கு விவசாய பயிற்சி

விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க விவசாயத்தில் ஈடுப்படுவோர் எண்ணிக்கையை கட்டாயம் அதிகரிக்க வேண்டும். இதற்காகக் கடந்த ஆண்டுத் தமிழக அரசு இளைஞர்களுக்கு விவசாயம் செய்யப் பயிற்சி அளிக்கத் துவங்கியது. இந்தப் பயிற்சி 2022-23 நிதியாண்டிலும் அளிக்கப்படும் என எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 1 லட்சம் நிதி உதவி

1 லட்சம் நிதி உதவி

இதோடு 7500 ஏக்கரில் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் செய்யப் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தைத் தனது பட்ஜெட் அறிக்கையில் அறிமுகம் செய்துள்ளார் எம்ஆர்கே பன்னீர் செல்வம். மேலும் இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 பேருக்கு தலா 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

 மாநில வேளான் வளர்ச்சி திட்டம்
 

மாநில வேளான் வளர்ச்சி திட்டம்

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுப் புதிதாக மாநில வேளான் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டு இதற்கு 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பாரம்பரிய வேளாண்மை ஊக்குவிப்பு, பசுந்தாள், மண்புழு உரம் தயாரிப்போருக்கு நிதி உதவி, 66 ஆயிரம் ஏக்கர் மாற்றுப்பயிர் விவசாயத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயிர்க்காப்பீடு இழப்பீடு

பயிர்க்காப்பீடு இழப்பீடு

கடந்த ஆண்டுப் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு திட்டத்திற்கு தமிழக அரசு சுமார் ரூ. 2029 கோடி அளித்தது. இதன் மூலம் 9 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கு 2339 கோடி ரூபாய் அளவிலான பயிர் இழப்பீட்டு காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

 தார்ப்பாய்

தார்ப்பாய்

மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களைப் பாதுகாக்க சுமார் 60000 விவசாயிகள் பலனடையும் வகையில் 5 கோடி ரூபாய் தொகை மானியத்தில் தார்ப்பாய் வழங்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Youngsters get 1 lakh financial help who creating business in farming sector-agribudget2022

Youngsters get 1 lakh financial help who creating business in farming sector-agribudget2022 வேளாண் தொழில் துவங்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. அசத்தலான அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.