பிக்சட் டெபாசிட் என்றாலே மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். அதிலும் சில சலுகைகள் கிடைக்கிறது எனில் இன்னும் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
இது சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மைக்கு எதிராக ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.
முதிர்ச்சியின் போது பாதுகாப்பான வருமானத்தின் பலனை உங்களுக்கு வழங்குகிறது.
வட்டி அதிகரிக்கலாம்
இது குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதுகாப்பான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம். குறிப்பாக தற்போது வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வரும் மாதங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சாத்தியமான திட்டம்
நீங்கள் உங்கள் தொழில் முனைவோராக இருந்தாலும், முதலீட்டு நிபுணராக இருந்தாலும், மூத்த குடி மகனாக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. இது சேமிப்பு கணக்குகளை விட அதிகமாக வட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 7% வரையில் வட்டி வழங்கப்பட்டு வருகின்றது.
கடன் பெறலாம் – முன் கூட்டியே பெறலாம்
இந்த திட்டங்கள் முன் கூட்டியே திரும்ப பெறவும் வழி உள்ளது. அதேபோல வைப்பு நிதிக்கு எதிராக கடனும் பெற முடியும். அவசர தேவைக்கு உடனடியாக எடுக்க முடியாது. குறிப்பாக பஜாஜ் பைனான்ஸ் போன்ற இடங்களில் இதற்கு எதிராக கடன் பெறலாம் என்பதால், உங்களுக்கு தேவையான கடனை உடனடியாக பெறலாம்.
நீண்டகால குறுகிய இலக்குகளுக்கு ஏற்றவாறு செய்யலாம்
உங்கள் வைப்பு நிதியினை குறுகிய கால மற்றும் நீண்டகால நோக்கங்களுக்கு, ஏற்ற திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஆக உங்களின் தேவை என்னவோ அதற்கு ஏற்ப திட்டமிடலாம். கார், வீடு கட்டுதல், கல்விக் கட்டணம், மருத்துவ செலவுகள் என பலவற்றிற்கும் நிதியளிக்கலாம்.
வட்டி தேவைக்கு ஏற்ப பெறலாம்
ஒவ்வொரு மாதம், காலாண்டுக்கு ஒரு முறை, 6 மாதங்களுக்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை என உங்களின் தேவைக்கு ஏற்ப பெறலாம். அதேபோல உங்களில் வாழ் நாள் முழுவதும் கூட பெறலாம். மொத்தத்தில் உங்களின் எதிர்காலத்திற்கு ஏற்றதொரு பாதுகாப்பான ஒரு திட்டமாகும்.
5 benefits that make bajaj finance FD a good investment
5 benefits that make bajaj finance FD a good investment/ இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!