தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.