உக்ரைனில் வீடு தோறும் சென்று வேட்டையாடும் ரஷ்ய ஆதரவு ஆயுதப்படை


உக்ரைனில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மரியுபோல் நகரில் ரஷ்ய ஆதரவு செச்சென் ஆயுதப்படை வீடு தோறும் சென்று மக்களை வேட்டையாடி வருவாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 24 நாட்களை எட்டியுள்ளது. ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தாலும், துறைமுக நகரமான மரியுபோல் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியிருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தற்போதும் அங்கு சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்ய ஆதரவு செச்சென் ஆயுதப்படை மற்றும் அதன் தலைவர் Ramzan Kadyrov ஆகியோர் தற்போது மரியுபோல் நகரில் களமிறங்கியுள்ளனர்.

மட்டுமின்றி, ஆபத்தான ஆயுதங்களுடன் வீடு தோறும் சென்று மக்களை வேட்டையாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தங்களின் ஆதரவை அளிக்க இருப்பதாக கூறியுள்ள செச்சென் ஆயுதப்படை,
இன்னும் உங்களால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை மிக விரைவில் உறுதிப்படுத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

மேலும், ரஷ்ய துருப்புகலிடம் சரணடைய மறுப்பவர்களுக்கு மரணம் உறுதி எனவும் எச்சரித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வேட்டை நாய் என குறிப்பிடப்படும் செச்சென் ஆயுதப்படைத் தலைவர் Ramzan Kadyrov,
உக்ரைன் நாட்டில் சிறப்பு நடவடிக்கைகளுக்காகவே தாங்கள் களமிறங்கியுள்ளதாகவும், உக்ரைனின் இராணுவமயமாக்கல் நடவடிக்கையை தடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் அமைந்துள்ள நாடக அரங்கம் ஒன்றில் ரஷ்ய குண்டுவீச்சுக்கு பின்னரே செச்சென் ஆயுதப்படை களமிறங்கியுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் குறித்த நாடக அரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கும் அறையில் பதுங்கி இருந்தனர் என தெரிய வந்துள்ளது. 

இதில், தற்போது 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் 1,300 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் இரக்கமற்ற செச்சென் ஆயுதப்படை களமிறங்கியுள்ளது அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது எனவும், நகரில் இன்னமும் உணவும் தண்ணீரும் இன்றி சுமார் 350,000 அப்பாவி மக்கள் பதுங்கி வாழ்வதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மரியுபோல் நகரில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுமாறும் போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடுமாறும் விளாடிமிர் புடினை வலியுறுத்தியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.