உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால் அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்குமென சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா விவகாரம் குறித்து அமெரிக்கா அதிபர் பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஏறத்தாழ 2 மணி நேரம் தொலைபேசியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுக்குப்பு மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சீனா அமைதி காத்து வருவதாகவும், உக்ரைன் மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனா பொருளுதவி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேபோல் உக்ரைன், மீதான போரை நிறுத்த நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பைடனை, ஜின்பிங் வலியுறுத்தியதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.