ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் சண்டையிடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களைத் தாங்களே காலில் சுட்டுக்கொள்கிறார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக, ரஷ்ய வீரர்கள் உக்ரேனிய வெடிமருந்துகளைத் தேடுகின்றனர். அதன்முலம் காயம் ஏற்பட்டால், அவர்கள் சுயமாக காயப்படுத்திக் கொண்டதைப்போல் இல்லாமல் உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெலாரஷ்ய ஊடகமான NEXTA, ரஷ்ய படையினரை இடைமறித்து அவர்களுடன் உரையாடியபோது, ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கூட சுயமாக தங்கள் காலில் சுட்டுக் கொண்டதாக ரஷ்ய சிப்பாய் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: “14 நாட்களாக எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர், நாங்கள் பயப்படுகிறோம். நாங்கள் உணவைத் திருடுகிறோம், வீடுகளில் புகுந்து பொதுமக்களைக் கொன்று வருகிறோம்.
ரஷ்ய அதிகாரிகள் தங்கள் வீட்டிற்குச் செல்ல கால்களில் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்கிறார்கள். எங்கும் சடலங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.
புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி!
மற்றொரு ரஷ்ய துருப்புக்கள் “உக்ரேனிய வெடிமருந்துகளை தங்கள் கால்களில் சுட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதற்காகத் தேடுகிறார்கள்” என்றார்.
Another intercepted conversation of the #SBU shows how demoralized and broken the invader army is: #Russian occupiers look for “#Ukrainian ammunition” to shoot themselves in the legs and go to the hospital. pic.twitter.com/jL2LJALjIm
— NEXTA (@nexta_tv) March 17, 2022
உக்ரைன் மீதான படையெடுப்பில் அவர்களது கடுமையான எதிர்ப்பினால் ஸ்தம்பிதமடைந்ததாக கூறப்படும் ரஷ்ய துருப்புக்களின் மன உறுதி பதிப்பிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில், இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.
போரிலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்குத் திரும்பும் போது வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.
மேலும் சில ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மருத்துவமனைகள் உட்பட அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்துமாறு கேட்கப்படும்போது மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ