உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக வந்துசேர்ந்துள்ள மூன்று ரஷ்ய விண்வெளி வீர்ர்கள், உக்ரைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலநிற உடைகளை அணிந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் வந்து சேர்ந்துள்ளனர்.
இவர்கள் விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ், அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் நாசாவின் சாதனையாக 365 நாள்கள் தொடர்ச்சியாக விண்வெளியில் இருந்து சாதனை புரிந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் ஆகியோர்க்கு மாற்றாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றத்தால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் 20 ஆண்டுகால நீண்ட அமெரிக்கா ரஷ்யா விண்வெளி உறவில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் ரஷ்ய வீரர்களின் இந்த விண்வெளி பயணம் சுமுகமாக முடிந்துள்ளது.
இருப்பினும், கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மூன்று ரஷ்ய வீரர்கள், ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீல நிற உடையில் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை நீக்காவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் நெருங்கி விளங்கி என எச்சரித்ததை தொடர்ந்து, 365 நாள்கள் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ள அமெரிக்காவின் விண்வெளி மார்க் வந்தே ஹெய் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.