மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இயறகையில் பல தீர்வுகள் உள்ளது என்பதை பலரும் அறிந்துகொள்ள விரும்புவதில்ல. அப்படியே தெரிந்துகொண்டாலும், அதை பயன்படுத்தாமல் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு தொற்றுக்கும் ஆங்கில மருத்தவத்தை நாடிச்செல்லும் பழக்கம் பலருக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.
இதனால் செலவுகள் அதிகம் ஆகுமே தவிர நோய் முற்றிலும் குணமடையுமா என்றால் அது சந்தேகம்தான். மேலும் ஆங்கில மருத்துவமுறை பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும. ஆனால் இயற்கையில் இருக்கும் பல மூலிகைகள் எவ்வித பராமரிப்பம் இல்லாமல் வளர்வதால், அவற்றின் மருத்துவ குணங்கள் நமக்கு எளிமையாக கிடைக்கும்.
அநத வகையில் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய் தொற்றுகளுக்கு இன்றியமையாத ஒரு பலனை தருவது கீழாநெல்லி. பொதுவாக குப்பைகளில் கிடைக்கும் இந்த கீழாநெல்லி செடி எவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டது என்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது. இந்த கீழாநெல்லி இலைகளில், பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் உள்ளதால், இதில் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும்.
பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள மூலிகைகளி்ல், ஒன்றாக கீழாநெல்லி, மஞசள் காமாலை நோய்க்கு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. சிறுநீரை பெருக்கும் தன்மை கீழாநெல்லிக்கு உண்டு. கண் தொடர்பான நோய், மற்றும் தீராத தலைவலி, கல்லீரல் தொடர்பான பிரச்சினை, சொறி சிரங்கு, உடல் சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றிற்கு சிறந்த மருத்துவத்தை தருகிறது.
மேலும் ரத்த சோகை, கல்லீரல் பாதிப்புகள், மலட்டுத்தன்மை, சர்க்கரை நோய் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும்.
கீழாநெல்லியை பயன்படுத்தும் முறை :
கீழாநெல்லி இல்லையை பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.. அதனுடன் எலுமிச்சை சாறு மோர் ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் மஞ்சள்காமாலை நீங்கும்.
தினமும் உலர்ந்த கீழாநெல்லி பொடியை உணவிற்கு முன்பு சேர்த்துக்கொண்டால், சர்க்ரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம், மற்றும் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை நீக்கும்.
கீழாநெல்லியின் வேரை அரைத்து பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும் தொற்று நோய் ஏற்படாது.
கீழாநெல்லி இலையை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், வயிற்றுப்புண் தீரும்.
கீழாநெல்லி வேர், பசும்பால், நல்லெண்ணெய் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடிகட்ட சாறை எடுத்து குடித்து வந்தால், தலைவலி நீங்கும்.
கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து குளித்து வந்தால், சொறி சிரங்கு நோய்கள் சரியாகும்.
“ “