சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி தொடர்பில் நடிகர் தனுஷிடம் இளையராஜா பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈரத்தது.
சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் , கங்கை அமரன் , பாடகர் மனோ , எஸ்.பி.பி. சரண் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
மேடையில் ‘ என்னுள்ளே… என்னுள்ளே… ‘ என்ற பாடலை பாடகிகள் சிலர் இணைந்து பாடி முடித்தவுடன், மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த நடிகர் தனுஷ்ஷை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா, இந்த பாடல் நன்றாக வர உன்னுடைய மாமனார் தான் காரணம் .
ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது என்று கூறிய நிலையில் தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கைதட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தனுஷுடன் அவரது இரு மகன்களும் வருகை தந்திருந்தனர். சமீபத்தில் தான் ரஜினிகாந்தின் மகளும் தனது மனைவியுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.