உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகளே உள்ளன.
உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு வலையமைப்பு ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளது. இந்த ஆண்டில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் இரண்டாமிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகியன முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாமிடங்களில் உள்ளன.
லக்சம்பர்க், சுவீடன், நார்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் முறையே ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களில் உள்ளன. இஸ்ரேல் ஒன்பதாம் இடத்திலும், நியூசிலாந்து பத்தாமிடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் சிம்பாப்வே, லெபனான், ஆப்கானிஸ்தான் ஆகியன உள்ளன.