திருப்பதியில் அடுத்த 3 மாதங்களுக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 21-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகளை 21-ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட்டுகளை 22-ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகளை 23-ம் தேதியும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பக்தர்கள் பெற்று கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 30 ஆயிரம் டிக்கெட்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதே போன்று நேரடியாக வரும் பக்தர்களுக்கும், சிறப்பு கவுன்டர்களில், நாளொன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM