ஏபிசி ஜூஸ், தேங்காய் எண்ணெய், காஃபி தூள்.. ஃபரினா வெண்பா பியூட்டி சீக்ரெட்ஸ் இதோ!

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா ஆசாத், ஆங்கரிங், மாடலிங், நடிப்பு என எப்போதும் பிஸியாக இருக்கிறார். இப்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலில், பவானி கேரேக்டரில் அபியின் தோழியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஃபரினா’ தனது சரும பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

தனது சரும பராமரிப்பு பற்றி பேசிய ஃபரினா; சரும பராமரிப்பு பொறுத்தவரைக்கும், நிறைய பேர் ஃபேஷியல், ப்ளீச் பண்றேனு போறாங்க.. நான் அதெல்லாம் நம்பமாட்டேன். நாம வெளியே பூசிக்கிறத விட, ஆரோக்கியமா சாப்பிடனும்.

சிலருக்கு சிக்கன் சாப்பிட்டா பருக்கள் வரும். அது காரணம், நிறைய பேருக்கு இயற்கையாவே உடம்பு சூடாக இருக்கும். சிலருக்கு ஹீட் ஒத்துக்காது. சாப்பிட்ட உடனே பரு வந்துரும். அப்படி இருக்கும் போது,  சிக்கன் சாப்பிடும் போது, அதை பேலன்ஸ் பண்ற மாதிரி, தயிர், மோர் ஏதாவது சாப்பிடனும்..

சருமம் பிரகாசமா இருக்க, தினமும் 2-3 ஃபிரெஷ் ஜூஸ் சர்க்கரை இல்லாம குடிக்கலாம். இளநீர் அவசியம் தினமும் குடிக்கனும். இதையெல்லாம் தினமும் பண்ணாலே, நம்ம சருமத்துக்கு பளபளப்பு கிடைக்கும்.

அதேமாதிரி ஏபிசி ஜூஸ் எனக்கு பயங்கரமா வேலை செய்ஞ்சது. காலையில வெறும் வயித்துல, ஏபிசி ஜூஸ் சர்க்கரை இல்லாம குடிக்கிறது கஷ்டம், அதனால, நம்ம எலுமிச்சை, மற்றும் இஞ்சி சேத்துக்கலாம். ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்க, இதை தினமும் குடிச்சா, எந்த சிகிச்சையும் இல்லாமலே, ஹீமோகுளோபின் ஏறிடும்.

முக பராமரிப்பு பொறுத்தவரையில்,  சில பேர் டோனர், மாய்ஸ்சரைசர், க்ளென்சிங், க்ரீம் எல்லாம் யூஸ் பண்ணுவாங்க, ஆனா நான், பொதுவாக மேக்கப் நீக்குவதற்கு, தேங்காய் எண்ணெய் தான் யூஸ் பண்ணுவேன். தேங்காய் எண்ணெய் அப்ளை பண்ணிட்டு, கழுவாம முகத்தை அப்படியே விட்டுருவேன். இது எனக்கு நல்லா வேலை செய்ஞ்சிருக்கு.. தேங்காய் எண்ணெய்’ நைட் யூஸ் பண்ணுவேன்.

காலையில குளித்த பிறகு, ஏதாவதொரு மாய்ஸ்சரைசர் போடுவேன். டோனர், சீரம் எதுவும் யூஸ் பண்ண மாட்டேன்.

கண்களை பொறுத்தவரையில், கருவளையங்களுக்கு, உருளைக்கிழங்கை அரைச்சி, கண்ணுக்கு கீழே வைக்கலாம். அதேபோல நைட்டு தூங்கும் போது, யூஸ் பண்ண டீ பேக்ஸ் எடுத்து, கண்ணுல வச்சுட்டு தூங்கிடலாம். இதை பண்ணும் போது, கருவளையம் கம்மியாகும்.

இப்போ ஏதாவது ஃபங்ஷன் இருக்கு.. இன்ஸ்டன்ட் க்ளோ வேணும் அப்படின்னா. காஃபி தூள், தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். அதுக்கூட பாலும் சேர்த்துக்கலாம். நல்லா ரிசல்ட் கிடைக்கும்.

அதேபோல கஸ்தூரி மஞ்சள், பால் சேர்த்த ஃபேஸ் பேக் யூஸ் பண்ணலாம். சிலபேர் நிறைய மஞ்சள் சேர்ப்பாங்க. அதனால முகத்துல பேட்சஸ் வரும், ஸ்கின் டிரை ஆகும். மஞ்சள் கொஞ்சமா எடுத்துட்டு, பால் நிறைய சேர்த்து போடுறது நல்லது.

தினமும் பீட்ரூட்டை உதட்டுல தேய்க்கும் போது, இயற்கையாவே உதட்டுக்கு லிப்ஸ்டிக் நிறம் வரும். அதேமாதிரி, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மாய்ஸ்சரைஸரும் உதட்டுக்கு போடலாம். ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து, அதுல கொஞ்சம் உப்பு போட்டு, கால்களை அதுல வைக்கலாம்.

ஃபேஸ் பேக் போடும் போது, முகத்தோடு விட்டுவிடாம, கழுத்துக்கும், கைகளுக்கும் போடனும். இவ்வாறு சரும பராமரிப்பு குறித்து ஃபரினா கூறினார்.

ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு சரும பராமரிப்பு குறித்து, ஃபரினா பேட்டியளித்த வீடியோ இதோ!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.