ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1915 சனாக்கலேல தொங்கு பாலத்தை அதிபர் தாயிப் எர்டோகன் திறந்து வைத்தார்.
இந்திய மதிப்பில் ஏறத்தாழ 21 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் துருக்கி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் இணைந்து பாலத்தை அமைத்துள்ளன.
டார்டனெல்ஸ் ஜலசந்தியின் குறுக்கே ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாலத்தால் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான பயண தூரம் ஆறு நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தாயிப் எர்டோகனின் பிரசாரத்திற்கு பெரும் மைல்கல்லாக பாலம் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.